தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் என்னும் மரபை உறுதி செய்யுங்கள் - அலூர் ஷா நவாஸ்
தமிழ்நாடு, 10 மே (ஹி.ச.) தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் நோக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10, 2026) தமிழகத்தின் 13-வது முதலமைச்சராகப் பதவியேற்றார். ஆனால், இன்றைய விழாவில் முதலில் ''வந்தே மாதரம்'' பாடல்
ஆளூர் ஷா நவாஸ்


தமிழ்நாடு, 10 மே (ஹி.ச.)

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் நோக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10, 2026) தமிழகத்தின் 13-வது முதலமைச்சராகப் பதவியேற்றார்.

ஆனால், இன்றைய விழாவில் முதலில் 'வந்தே மாதரம்' பாடல் ஒலிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தேசிய கீதமான 'ஜன கண மன' பாடப்பட்டது. இறுதியாகவே தமிழர்களின் உயிர்மூச்சான 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடப்பட்டது.

இதுகுறித்து,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்குத் தள்ளியது போல், தமிழ்நாட்டையும் தள்ளிவிடாதீர்கள்.

சட்டப்பேரவை கூடும் போது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் என்னும் மரபை உறுதி செய்யுங்கள்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam