அசாம் முதல்வராக இரண்டாவது முறையாக ஹிமந்த பிஷ்வ சர்மா மே 2 ஆம் தேதி பதவியேற்பு
அசாம், 10 மே (ஹி.ச.) அசாமின் முதல்வராக ஹிமந்த பிஸ்வ சர்மா மே 12ஆம் தேதி மீண்டும் பதவியேற்க உள்ளார். 126 தொகுதிகளைக் கொண்ட அசாமில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பாஜக 82 இடங்களையும், அதன் கூட்டணி கட்சிக
ஹிமந்த


அசாம், 10 மே (ஹி.ச.)

அசாமின் முதல்வராக ஹிமந்த பிஸ்வ சர்மா மே 12ஆம் தேதி மீண்டும் பதவியேற்க உள்ளார்.

126 தொகுதிகளைக் கொண்ட அசாமில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.

பாஜக 82 இடங்களையும், அதன் கூட்டணி கட்சிகள் 20 இடங்களையும் கைப்பற்றின. வெறும் 19 இடங்களுடன் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது.

இந்த நிலையில் குவாஹாட்டியில் வெற்றி பெற்ற பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதில், பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஹிமந்த பிஸ்வ சர்மா ஞாயிற்றுக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து பாஜக தலைமையிலான தேஜ கூட்டணியின் தலைவராகவும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக ஹிமந்த பிஸ்வ பொறுப்பேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.

அதேசமயம் முதல்வராக ஹிமந்த பிஸ்வ சர்மா மே 12ஆம் தேதி மீண்டும் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேஜ கூட்டணி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே உரையாற்றிய ஹிமந்த பிஸ்வ சர்மா, கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் மக்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாகவும் அவர் கூறினார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P