Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மே (ஹி.ச.)
திரைத்துறையில் உச்சநட்சத்திரமாக கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்த நடிகர் விஜய், அரசியலுக்குள் வந்தபோது பலரும் அதை ஒரு புதிய அத்தியாயமாகவே பார்த்தனர்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதலமைச்சராக பதவியேற்ற விஜய், அதன் பின்னர் தலைமைச் செயலகத்துக்குச் சென்று தனது முதல் நாள் நிர்வாகப் பொறுப்புகளை தொடங்கினார்.
ஆட்சிப் பொறுப்பேற்ற சில நிமிடங்களிலேயே, மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இதன் தொடர்ச்சியாக இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை குறித்து விரிவான ஆய்வுக் கூட்டத்தை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையேற்று நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் எம். சாய்குமார், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. மணிவாசன், காவல்துறை தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர், முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், பொதுத் துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், முதலமைச்சரின் செயலாளர் ஜி. லட்சுமி பிரியா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பதவியேற்பு விழாவில் உறுதிமொழி எடுத்த தருணத்திலிருந்து நிர்வாகக் கூட்டம் வரை ஒவ்வொரு நகர்வும், விஜய் தனது அரசியல் பயணத்தை வெறும் சின்னங்களாலும் கோஷங்களாலும் அல்ல; நேரடி நிர்வாக நடவடிக்கைகளால் தொடங்கியிருப்பதை வெளிப்படுத்துகிறது.
Hindusthan Samachar / ANANDHAN