விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், போடப்பட்ட முக்கிய கையெழுத்து!
சென்னை, 10 மே (ஹி.ச.) தமிழ்நாட்டின் 13 ஆவது முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10 ஆம் தேதி) பதவியேற்றுக் கொண்டார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
CM Vijay Sign


சென்னை, 10 மே (ஹி.ச.)

தமிழ்நாட்டின் 13 ஆவது முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10 ஆம் தேதி) பதவியேற்றுக் கொண்டார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்க்கு முதலமைச்சர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் விஜய், 3 முக்கிய கோப்புகளில் மக்கள் முன் கையெழுத்திட்டார்.

1) இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு, 2 மாதங்களுக்கு 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் ஆணை

2) பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பொருட்டு, தடுப்பு மற்றும் பாதுகாப்பு யுக்திகளை முதன்மை மற்றும் ஒற்றை இலக்காக கொண்டு செயல்பட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்க ஆணை

3) தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு, அனைத்து மாநகரம் மற்றும் மாவட்டங்களில் போதைப்பொருட்கள் தடுப்படை உருவாக்குவது குறித்து ஆணை

Hindusthan Samachar / ANANDHAN