அரியணை விழாவில் அன்னைத் தமிழுக்கு மூன்றாவது இடமா? - விசிக கண்டனம்!
சென்னை, 10 மே (ஹி.ச) தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்கும் பதவியேற்பு விழாவில், முதலில் வந்தே மாதம், தேசியகீதம், 3-வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்த விவகாரம் பேசுபொருளானது. இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சித் தலை
Thiruma


சென்னை, 10 மே (ஹி.ச)

தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்கும் பதவியேற்பு விழாவில், முதலில் வந்தே மாதம், தேசியகீதம், 3-வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்த விவகாரம் பேசுபொருளானது.

இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது அறிக்கையில், அரசு நிகழ்ச்சிகளில் எப்போதும் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே தொடக்கத்தில் பாடப்படும். நிகழ்ச்சி நிறைவின் போது தேசிய கீதம் பாடுவதுதான் மரபு.

இதற்கு முன்பு ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி அவர்கள் அதை வலியுறுத்திய போது கூட அன்றைய திமுக அரசு அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால் ச.ஜோசப் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்கும் விழாவின் போதும், தற்காலிக சபாநாயகராக கருப்பையா தேர்வு செய்கின்ற நிகழ்வின் போதும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படுகிறது.விமர்சனங்கள் வந்த பிறகும் அதை மாற்றிக் கொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

அவ்வாறு வந்தே மாதரம், தேசியகீதம் பாடப்பட்டு மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டு உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN