தமிழகத்தில் முழு மது விலக்கை கொண்டு வர வேண்டும் - விஜய்க்கு ராமதாஸ் கோரிக்கை
விழுப்புரம், 10 மே (ஹி.ச.) தமிழகத்தில் 17-வது சட்டமன்றத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்க
Ramadoss


விழுப்புரம், 10 மே (ஹி.ச.)

தமிழகத்தில் 17-வது சட்டமன்றத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கும் அவரது அமைச்சரவையில் அங்கம் பெற்றுள்ள அமைச்சர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜோசப் விஜய் தலைமையில் அமைந்துள்ள புதிய தமிழக அரசு, தமிழக மக்களின் நலனையும், சமூக நீதியையும், வளர்ச்சியையும் முன்னிறுத்தி சிறப்பான ஆட்சியை வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த புதிய அரசு மக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நல்லாட்சியை வழங்க வேண்டும்.

மேலும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக அனைத்து தரப்பினரையும் இணைத்து செயல்பட்டு வெற்றிகரமான நிர்வாகத்தை வழங்க வாழ்த்துகள்.

பதவி ஏற்ற உடன் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கவும், போதை ஒழிப்புக்கு சிறப்பு படை உருவாக்கவும் முதல் கையொப்பம் இட்டமையை வரவேற்று எனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்திட வேண்டும். அவற்றை கொண்டு உரிய சமூகங்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கிட வழிவகை செய்ய வேண்டும்.

ஜோசப் விஜய் அவர்களுக்கு பெரும்பாலும் இளைஞர்களும், மகளிர்களும் வாக்களித்து உள்ளனர். அவர்களின் நலன் கருதி தமிழகத்தில் முழு மது விலக்கை கொண்டு வர வேண்டும் மற்றும் போதை வஸ்துகள் இல்லாமல் செய்ய வேண்டும்.

இதை இந்த ஆட்சியில் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN