Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 10 மே (ஹி.ச.)
தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, அவரது நீலாங்கரை இல்லத்தில் மீண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முதல்வராக விஜய் பதவியேற்பதில் கடந்த சில நாட்களாக அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான சிக்கல்கள் நிலவி வந்த நிலையில், அவரது இல்லத்தில் முன்னதாக அமைக்கப்பட்டிருந்த காவல் பாதுகாப்புகள் முழுமையாக அகற்றப்பட்டிருந்தன.
பாதுகாப்பு சோதனைக்காக வைக்கப்பட்டிருந்த மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட சாதனங்களையும் காவல்துறையினர் திரும்பப் பெற்றுச் சென்றிருந்தனர்.
இந்நிலையில், இன்று சற்று நேரத்திற்கு முன்பு தமிழகத்தின் முதலமைச்சராக ஜோசப் விஜய் அதிகாரப்பூர்வமாக பதவியேற்ற மறுநொடியே, அவரது நீலாங்கரை இல்லத்தில் மீண்டும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மெட்டல் பரிசோதனை இயந்திரங்கள், கண்காணிப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், காவல்துறை பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக செயல்படவுள்ளதால், பாதுகாப்பு நடைமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / P YUVARAJ