Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 10 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டின் முதல்வராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று
(10-05-26) காலை 10 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்கவுள்ளார்.
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்க்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். விஜய்யுடன் என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளார்.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசியல் வானில் உதித்துள்ள புதிய ஆற்றல்மிகு நட்சத்திரம் விஜய், பதவியேற்க உள்ளார் என்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். தாமதமாக கிடைத்தாலும் தகுதியான இந்த தருணத்திற்கு பின்னணியில் ஆலோசனை வழங்கிய குழுவில் ஒருவராக இருந்தது பெருமை.
குறிப்பாக இளைஞர் குழுவின் ஆலோசனைகளுக்கு அவர் அளித்த முக்கியத்துவம் பாராட்டுக்குரியது. இனிமேல்தான் சிறப்பானவை வர உள்ளன.
என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி எம்.பி பங்கேற்கவுள்ளார்.
இந்த விழாவையொட்டி சென்னையில் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b