Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டின் 13வது முதல்வராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (10.05.2026) காலை 10 மணிக்கு பதவியேற்றார்.
அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதனையடுத்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது கருப்பையாவிற்கு ஆளுநர் அர்லேக்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை (11.05.2026) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அப்போது, சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்க உள்ளனர்.
இது தொடர்பாகத் தலைமைச் செயலகத்தின் முதன்மைச் செயலாளர் கி. சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை காலை 09.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூடுகிறது.
இக்கூட்டத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக்கொள்வார்கள்.
உறுப்பினர்கள் தங்களது பதவியேற்பு நிகழ்வின் போது, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தேர்தல் சான்றிதழை தவறாமல் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோருக்கான தேர்தல் மே 12ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறும்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 13ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அர்லேகர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b