'நிதி இல்லை' போன்ற காரணங்களைத் தேடாமல் ஆக்கபூர்வமான நிர்வாகத்தில் கவனம் செலுத்துங்கள் - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை, 10 மே (ஹி.ச.) தமிழ்நாட்டின் 13வது முதல்வராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (10-05-26) காலை 10 மணிக்கு பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பதவி பிரமாணம் செய்து வைத்தார். விஜய்யுடன் சேர்த்து என்.ஆனந்த்,
Former Minister Thangam Thennarasu.


சென்னை, 10 மே (ஹி.ச.)

தமிழ்நாட்டின் 13வது முதல்வராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (10-05-26) காலை 10 மணிக்கு பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

விஜய்யுடன் சேர்த்து என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், கீர்த்தனா, பிரபு உள்ளிட்ட தவெக எம்.எல்.ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

முதல்வர் பதவியேற்ற பின் விஜய் கூறுகையில் தமிழக அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையாக வெளியிடுவேன் என்று கூறியிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது,

தமிழ் நாட்டின் மாண்புமிகு முதல்வராக இன்று பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள்!

கழகத் தலைவர் அண்ணன் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நிதி நெருக்கடிகளையும் பேரிடர்களையும் திறம்படக் கையாண்டு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை இரட்டை இலக்க வளர்ச்சிக்குக் கொண்டு சென்றதைச் சான்றாகக் கொண்டு,

மாநிலத்தின் கடனளவு அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பிற்குள்ளேயே இருப்பதையும் உணர்ந்து, தலைவர் அவர்கள் சுட்டிக்காட்டி இருப்பதைப் போல, 'நிதி இல்லை' போன்ற காரணங்களைத் தேடாமல் ஆக்கபூர்வமான நிர்வாகத்தில் கவனம் செலுத்தி தமிழ் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடுவதே சரியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b