தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை, 10 மே (ஹி.ச) வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். இதுகுறித்து,வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் பல்வேறு இடங்களில், நேற்று பரவலாக மழை பெய்தது. நேற்று கா
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


சென்னை, 10 மே (ஹி.ச)

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.

இதுகுறித்து,வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் பல்வேறு இடங்களில், நேற்று பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில், 17 செ.மீட்டர் மழை பதிவானது.

திருநெல்வேலி மாவட்டம், நாலுமுக்கு 16; காக்காச்சி 14; மாஞ்சோலை 11 செ.மீட்டர் மழை பெய்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில், 3 செ.மீட்டர் மழை பதிவானது.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடல் பகுதிகளுக்கு அப்பால் உள்ள லட்சத்தீவு பகுதிகளின் மேல் சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

மேலும், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி சுமார் 5.8 கி.மீ உயரம் வரை நிலவுகிறது. இதன் காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 11-ம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்.

இன்று (மே 10) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்) கனமழை பெய்யக்கூடும்.

நாளை (மே 11) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

மே 12ம் தேதி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில், இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மே 13ம் தேதி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இடி, மின்னலுடன், கனமழைக்கு வாய்ப்பு உண்டு.

மே 14ம் தேதி, திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலுார், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரியில், கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு, 'ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பத்துார், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலுார், நாகப் பட்டினம், தஞ்சாவூர், ராணிப் பேட்டை வேலுார் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வெப்பநிலையை பொறுத்தவரை, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வரும் 13ம் தேதி வரை, 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b