Enter your Email Address to subscribe to our newsletters



சென்னை, 10 மே (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றதும் மேற்கொண்ட முதல் நடவடிக்கைகளுக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
மாவட்ட வாரியாக போதைப்பொருள் தடுப்புப் படை அமைப்பதற்கும், மகளிர் பாதுகாப்பிற்காக “சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப் படையை உருவாக்குவதற்கும் முதலமைச்சர் விஜய் முதல் கையெழுத்திட்டிருப்பதை மனப்பூர்வமாக வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் நீண்டகாலமாக நிலவி வரும் ஊழலை தடுக்கும் வகையில், “நானும் தவறு செய்யமாட்டேன்; என்னோடு இருப்பவர்களையும் தவறு செய்யவிட மாட்டேன்” என்று முதலமைச்சர் விஜய் வெளிப்படையாகத் தெரிவித்திருப்பது பாராட்டுக்குரியது என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசு எப்படிப்பட்ட ஆட்சியாக இருக்கும் என்பதை தனது முதல் உரையிலேயே முதலமைச்சர் தெளிவுபடுத்திவிட்டார் என்றும், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நடைமுறைக்கு வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, புதிய அரசின் மக்கள் நல நடவடிக்கைகளுக்கு தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ