Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 10 மே (ஹி.ச.)
நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும், தமிழ்நாடு முதலமைச்சராகவும் திரு. சி. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளார்.
அவரின் பதவியேற்பு விழாவில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன்,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள
திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு, எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழக மக்களின் நலனையும் மாநிலத்தின் முன்னேற்றத்தையும் முதன்மையாகக் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வரும் ஐந்து ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை திறம்பட செயல்படுத்தி, அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் நிர்வாகம் அமைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதோடு, ஜனநாயகப் பொறுப்புணர்வுடனும் மக்கள் நலக் கடமையுடனும் செயல்பட்டு, தமிழ்நாட்டிற்கு சிறந்த ஆட்சியை வழங்க வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்பையும் நயினார் நாகேந்திரன் பதிவு செய்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ