மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும் - தமிழக முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து
சென்னை, 10 மே ( ஹி.ச) தமிழ்நாட்டின் முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜயும், அவருடன் 9 பேர் கொண்ட அமைச்சரவையும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிய முதலமைச்சருக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித
Modi Congratulates


சென்னை, 10 மே ( ஹி.ச)

தமிழ்நாட்டின் முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜயும், அவருடன் 9 பேர் கொண்ட அமைச்சரவையும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

புதிய முதலமைச்சருக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், முதலமைச்சர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

தமிழ்நாடு முதல்-அமைச்சராக பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள்.

அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள்.

மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்

என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b