Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மே (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது.
வழக்கின் போது பெரியகருப்பன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திருப்பத்தூர் என்ற பெயரில் 185 மற்றும் 50 என இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் ஒரு தபால் வாக்குச் சீட்டு தவறுதலாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டதால், அங்கு அந்த வாக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.
மேலும், அந்த தபால் வாக்குச் சீட்டை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கே அனுப்பியிருக்க வேண்டும் என்றும், அந்த ஒரு வாக்கு சரியாக எண்ணப்பட்டிருந்தால் தேர்தலின் இறுதி முடிவு மாறியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவைத் தேர்தலில் 1 வாக்கு வித்தியாசத்தில் ஏற்பட்ட தோல்வியை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கு அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
வழக்கின் மேலான விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ