திருப்பத்தூர் தேர்தல் முடிவுக்கு எதிராக பெரிய கருப்பன் வழக்கு - சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று அவசர விசாரணை
சென்னை, 10 மே (ஹி.சS.) அண்மையில் நடைபெற்று முடிந்த திருப்பத்தூர் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றி கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, திமுக வேட்பாளர் பெரிய கருப்பனை விட வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது
Periyakaruppan Files Case Challenging Tirupattur Election Result


சென்னை, 10 மே (ஹி.சS.)

அண்மையில் நடைபெற்று முடிந்த திருப்பத்தூர் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றி கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, திமுக வேட்பாளர் பெரிய கருப்பனை விட வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த முடிவு மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு வாக்கு வித்தியாசம் என்பது வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புவதாகக் கூறி, பெரிய கருப்பன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள சீனிவாச சேதுபதி, சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கையை மறு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தின் அவசரத் தன்மையை கருத்தில் கொண்டு, உயர் நீதிமன்றம் இந்த மனுவை இன்றே விசாரணைக்கு எடுத்துள்ளது.

இன்றைய விசாரணையில், சீனிவாச சேதுபதியின் பதவியேற்புக்கு தடை விதிக்கப்படுமா அல்லது வாக்கு எண்ணிக்கையில் மறு ஆய்வுக்கு உத்தரவிடப்படுமா என்பது தெரியவரும்.

இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் இவ்வழக்கின் காரணமாக திருப்பத்தூர் தொகுதியின் அரசியல் களம் மட்டுமின்றி, தமிழக அரசியல் வட்டாரமும் பரபரப்பாகியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b