Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டின் 14வது முதலமைச்சராக பதவியேற்ற ஜோசப் விஜய், பதவியேற்பு விழாவை தொடர்ந்து முதன்முறையாக சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்று அலுவல் பணிகளை தொடங்கினார்.
தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, அரசின் பல்வேறு துறைகள் தொடர்பான முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார். மேலும், மாநில நிர்வாகம் மற்றும் உடனடி செயல்பாடுகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்ற முதலமைச்சர் விஜய், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது இருவரும் சமகால அரசியல் சூழல் மற்றும் சமூகநீதி சார்ந்த கருத்துகள் குறித்து கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.
பின்னர், பெரியார் ஈ.வெ.ரா நினைவிடத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய், மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரது இந்த வருகை திராவிட இயக்க வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam