Enter your Email Address to subscribe to our newsletters

கேரளா, 10 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோசப் விஜய்க்கு கேரள முன்னாள் முதலமைச்சர் பினராய் விஜயன் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாடு முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஜோசப் விஜய்க்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜனநாயக அமைப்பில் மக்கள் வழங்கும் தீர்ப்பு மிகப் பெரிய பொறுப்பாகும். தமிழ்நாட்டு மக்கள் தங்கள்மீது வைத்துள்ள நம்பிக்கை, சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் மக்கள்நலன் ஆகிய மதிப்புகளை உயர்த்திப் பிடிக்கும் ஆட்சியாக உருவாகும் என நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கேரளமும் தமிழ்நாடும் நீண்டகால நட்பும் ஒத்துழைப்பும் பகிர்ந்து வரும் மாநிலங்களாகும். கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தவும், மதச்சார்பின்மையை பாதுகாக்கவும், இரு மாநில மக்களும் இணைந்து செயல்பட முடியும் என்று நம்புகிறேன்” எனவும் பினராய் விஜயன் தனது வாழ்த்து பதிவில் கூறியுள்ளார்.
தமிழில் வெளியிடப்பட்டுள்ள பினராய் விஜயனின் இந்த வாழ்த்து பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P