முதல்வராக பதவியேற்கும் த.வெ.க தலைவர் விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து
சென்னை, 10 மே (ஹி.ச.) தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (10-05-26) காலை 10:00 மணிக்கு பதவியேற்கவுள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு விஜய் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. ஆளுநர் ராஜேந்திர வி
Premalatha Vijayakant extends wishes to T.V.K. leader


சென்னை, 10 மே (ஹி.ச.)

தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (10-05-26) காலை 10:00 மணிக்கு பதவியேற்கவுள்ளார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு விஜய் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்க்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்த நிலையில், தமிழக முதல்வராக பதிவி ஏற்க உள்ள தவெக தலைவர் விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவியேற்கவிருக்கும் எங்க வீட்டு பையன் தம்பி விஜய்க்கு மனபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் சிறந்த நிர்வாகத் திறமையுடன் செயல்பட்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என அன்பு தம்பி விஜய்க்கு கேப்டனின் சார்பாகவும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகவும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்

என கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b