முதலமைச்சர் விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்து ராகுல் வாழ்த்து
சென்னை, 10 மே (ஹி.ச.) தமிழ்நாட்டின் 14-வது முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக் கொண்டார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான
ராகுல்


சென்னை, 10 மே (ஹி.ச.)

தமிழ்நாட்டின் 14-வது முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். தமிழக அரசியலில் புதிய மாற்றத்தையும், புதிய தலைமுறையின் எழுச்சியையும் குறிக்கும் நிகழ்வாக இந்த பதவியேற்பு விழா பார்க்கப்பட்டது.

விஜய்க்கு ஆளுநர் பதவிப்பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு விஜய்க்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்த ராகுல் காந்தி, தமிழ்நாட்டு மக்கள் மாற்றத்தைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும், அந்த மாற்றத்தை நிறைவேற்ற விஜய் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் தனது பதிவில்,

இந்த பயணத்தில் நான் அவருடன் உறுதுணையாக இருந்து ஆதரிக்கிறேன். தமிழக வெற்றிக் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து மேலும் வலிமையான, முன்னேற்றமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசியலில் புதிய கூட்டணி ஆட்சிக்கு இது முக்கியமான தொடக்கமாக பார்க்கப்படுவதுடன், விஜயின் தலைமையில் புதிய அரசியல் அத்தியாயம் தொடங்கியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P