சாத்தான்குளம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பயில மாணவியர் மே 29-ம் தேதி விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி, 10 மே (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026-2027-ம் கல்விய ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவியர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம்,
சாத்தான்குளம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பயில மாணவியர் மே 29-ம் தேதி விண்ணப்பிக்கலாம்!


தூத்துக்குடி, 10 மே (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026-2027-ம் கல்விய ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவியர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.

இக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல் (Commerce), வணிக நிர்வாகவியல் (BBA), கணிதவியல், கணினி அறிவியல் ஆகிய இளநிலை (UG) பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியின் வாயிலாகப் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வரும் மே 29-ம் தேதி கடைசி நாளாகும்.

இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமம் இருந்தால், மாணவிகளுக்கு உதவச் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'மாணவர் சேர்க்கை உதவி மையம்' (Admission Help Desk) செயல்பட்டு வருகிறது.

மாணவிகள் இந்த மையத்தை நேரில் அணுகியும் கூடுதல் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

இத் தகவலைக் கல்லூரி முதல்வர் (மு.கூ.பொ.) ஜோசப் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b