Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார் ச.ஜோசப் விஜய்.
ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
விஜயை தொடர்ந்து, 9 பேர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பதவியேற்றனர்.
ஆனந்த், ஆதவ் அர்ஜீனா, அருண்ராஜ், செங்கோட்டையன், நிர்மல்குமார், டி.கே.பிரபு, ராஜ்மோகன், வெங்கடராமன் கீர்த்தனா உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
முதல் கோப்பில் முதலமைச்சர் விஜய் 500 யூனிட்களுக்கு உள்ளே மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட்கள் இலவசம்.
இரண்டாவது கையெழுத்து:
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை
மூன்றாவது கையெழுத்து:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போதை பொருள் தடுப்பு படை அமைப்பு.ஆகிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய்,
மாநிலத்தின் நிதி நிலைமை மோசமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் விஜய், தனது நிர்வாகம் முற்றிலும் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக இருக்கும் என உறுதியளித்துள்ளார்.
மேலும், தேர்தல் வாக்குறுதிகளைச் சீராக நிறைவேற்றத் தமக்கு போதிய கால அவகாசம் தேவை என்றும் அவர் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியான பின்னரே அரசுப் பணிகள் தொடங்கும்.
தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
எல்லோருக்கும் பாதுகாப்பு, அடிப்படை வசதிகளே எனது முன்னுரிமை வழங்கப்படும்.
மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு மற்றும் அனைத்துத் தரப்பு மக்களுக்குமான பாதுகாப்பைத் தாம் உறுதி செய்யப்போவதாகத் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவம், குடிநீர் மற்றும் சாலை வசதி போன்ற அடிப்படைத் தேவைகளைச் சீரமைப்பதில் தனது அரசு முழு கவனத்தைச் செலுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / Durai.J