Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மே (ஹி.ச.)
கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பெற்று 5 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ், அந்த கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு அளித்தது மட்டுமல்லாமல் அந்த கூட்டணியிலும் இணைந்தது. இதன் மூலம், தவெக கூட்டணிக்கு 113 இடங்கள் கிடைத்தன.
சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள், தவெக ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது.
இந்த நிலையில், தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (10-05-26) காலை 10:00 மணிக்கு பதவியேற்கவுள்ளார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு விஜய் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்க்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
விஜய்யுடன் என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளார்.
அவர்களுக்கும் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி எம்.பி பங்கேற்கவுள்ளார்.
தமிழக முதல்வராக த.வெ.க., தலைவர் விஜய், இன்று பதவியேற்க உள்ள நிலையில், 9 பேர் அடங்கிய அமைச்சரவை குறித்த உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.
தவெக அமைச்சரவையில் இடம் பெறுவோர் உத்தேச பட்டியல் வெளியானது.
பொது நிர்வாகம் காவல் மற்றும் உள்துறை - விஜய்
பொதுப்பணித்துறை - செங்கோட்டையன்
மின்சாரத்துறை - CTR நிர்மல் குமார்
விளையாட்டு மற்றும் விலக்குதுறை - ஆதவ் அர்ஜுனா
நகராட்சி நிர்வாகத்துறை - என்.ஆனந்த்
சிறுபான்மை நலத்துறை - முஸ்தபா
ஆதி திராவிடர் நலத்துறை - ராஜ்மோகன்
பத்திரப்பதிவு துறை - அருண்ராஜ்
பள்ளிக்கல்வித்துறை - வெங்கட்ரமணன்
என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விழாவையொட்டி சென்னையில் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேரு மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 6,000க்கும் மேற்பட்ட காவல்துறையில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் நாளை பதவியேற்கவுள்ளனர்.
மே 13ஆம் தேதிக்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் அர்லேகர் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b