பதவியேற்பு விழாவுக்கு த.வெ.க தலைவர் விஜய் வருகை
சென்னை, 10 மே (ஹி.ச.) தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (10-05-26) காலை 10 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ளார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்க்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து
TVK President Vijay Arrives for the Swearing-in Ceremony


சென்னை, 10 மே (ஹி.ச.)

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று

(10-05-26) காலை 10 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்க்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

விஜய்யுடன் என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளார்.

அவர்களுக்கும் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவுக்கு தவெக தலைவர் விஜய் தற்போது வருகை தந்துள்ளார்.

இன்று காலை 8 மணிக்கு தவெக தலைவர் விஜய் தனது நீலாங்கரை இல்லத்தில் இருந்து நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு பலத்த போலீசார் பாதுகாப்புடன் புறப்பட்டு வந்துள்ளார்.

நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த விழாவில் ஏராளமான விஐபிக்கள் பங்றேற்றுள்ளனர்.

காங்கிரஸ் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், விஜய் பெற்றோர் சந்திரசேகர், ஷோபா, நடிகை திரிஷா, இந்திய கம்யூ., மாநில செயலாளர் வீரபாண்டியன் மற்றும் பலர் பங்கேற்றுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b