தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் - தமிழக ஆளுநர்
சென்னை, 10 மே (ஹி.ச.) நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததை அடுத்து, விஜய்க்கு பெரும்பான்மை
Sabhw


சென்னை, 10 மே (ஹி.ச.)

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததை அடுத்து, விஜய்க்கு பெரும்பான்மை பலம் கிடைத்தது.

இதையடுத்து இன்று அவர் முதல்வராக பதவியேற்றார்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவரோடு, ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இதையடுத்து, தலைமைச் செயலகம் வந்த முதல்வர் விஜய், தனது அலுவலகப் பணிகளைத் தொடங்கினார்.

எம்எல்ஏக்கள் பதவியேற்பு நாளை காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சபாநாயகராக கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான கோப்பில் விஜய் கையெழுத்திட்டார்.

தொடர்ந்து மாலையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தற்காலிக சபாநாயகராக கருப்பையாவுக்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P