பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் முதலமைச்சர் விஜய் - தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பை எதிர் நோக்குவதாக பதில்
சென்னை, 10 மே (ஹி.ச.) தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், முதலமைச்சராக பொறுப்பேற்றதையொட்
மோடி


சென்னை, 10 மே (ஹி.ச.)

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,

முதலமைச்சராக பொறுப்பேற்றதையொட்டி வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எங்கள் மக்களின் நலனும் முன்னேற்றமும் மட்டுமே எங்களின் ஒரே நோக்கமாகும். தமிழ்நாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சிக்காக மத்திய அரசின் செயற்பாட்டு ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும் என எதிர்நோக்குகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜயின் இந்த பதிவு, மத்திய - மாநில உறவுகள் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam