விஜய் பதவியேற்பு விழாவில் இசைக்கப்பட்ட வந்தே மாதரம் - திமுக கடும் கண்டனம்
சென்னை, 10 மே (ஹி.ச.) தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பதவியேற்றுக் கொண்ட நிகழ்வைத் தொடர்ந்து, பதவியேற்பு விழாவில் இடம்பெற்ற நிகழ்வுகளை சுட்டிக்காட்டி திராவிட முன்னேற்றக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திமுக வெளி
திமுக


சென்னை, 10 மே (ஹி.ச.)

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பதவியேற்றுக் கொண்ட நிகழ்வைத் தொடர்ந்து, பதவியேற்பு விழாவில் இடம்பெற்ற நிகழ்வுகளை சுட்டிக்காட்டி திராவிட முன்னேற்றக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,

பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இந்த அவலநிலை இல்லை. மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியிலேறியபோதும் ‘வந்தே மாதரம்’ ஒலிக்கவில்லை.

ஆனால் தமிழ்நாட்டில் மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்திற்குப் பிறகு தமிழர்களின் உயிர்மூச்சான தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் பட்சமாக நிறுத்தி தமிழ்த்தாயை அவமதித்துள்ளனர்” என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும்,

தமிழர் மரபுகளையும், மொழி மரியாதையையும் சிதைக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

இதுவே அவர்கள் கூறிய மாற்றமா? ஆட்சியின் முதல் நாளிலேயே தமிழ்த்தாய்க்கு நேர்ந்த இந்த இழிவு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்ட அவமானம் என்றும் திமுக தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் கடும் விவாதம் எழுந்துள்ளது.

#TVKFails என்ற ஹாஷ்டேக்கை பயன்படுத்தி திமுகவினர் மற்றும் ஆதரவாளர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P