Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மே (ஹி.ச.)
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
அதில், திருச்சி கிழக்கு தொகுதியை விட பெரம்பூர் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் விஜய் வெற்றி பெற்றார். இதையடுத்து முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய், சட்டப்படி ஒரு தொகுதியில் மட்டுமே எம்எல்ஏவாக நீடிக்க முடியும் என்பதால், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் திருச்சி கிழக்கு தொகுதிக்கு ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
குறிப்பாக, லால்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P