கடந்த 2 நாட்களாக ஊட்டியில் நடைபெற்று வந்த நாய்கள் கண்காட்சி இன்றுடன் நிறைவு
நீலகிரி, 10 மே (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக ஆண்டுதோறும் கோடை விடுமுறையின்போது தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மூலம் பல்வேறு கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறி
dog show held in Ooty


நீலகிரி, 10 மே (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக ஆண்டுதோறும் கோடை விடுமுறையின்போது தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மூலம் பல்வேறு கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, ஆண்டுதோறும் சவுத் இந்தியன் கேனல் கிளப் சார்பில் நாய்கள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான 138 மற்றும் 139-வது நாய்கள் கண்காட்சி ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் கடந்த 8ம் தேதி துவங்கி இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. 8ம் தேதி கீழ் படிதல் போட்டிகள் நடத்தப்பட்டன.

நேற்றும் இன்று பல்வேறு வகையான நாய்களின் அணிவகுப்பு மற்றும் கண்காட்சி நடைபெற்று வருகின்றது.

இப்போட்டியில் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த 435 நாய்கள் பங்கேற்றுள்ளன. காமன் அவுண்ட், சிப்பிபாறை, கோம்பை, கன்னி, மதுல் அவுண்ட், பாஸ்னி, ராஜபாளையம், ராம்பூர் அவுண்ட் உட்பட 55 வகைகளை கொண்ட நாய்கள் பங்கேற்றுள்ளன.

மேலும், இந்த ஆண்டு புதிதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த செப்பர்க், பிரேசில் நாட்டை சேர்ந்த பெராட் டி பிரஸ்சினரியோ ஆகிய இரு நாய் வகைகள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.

நாய் கண்காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் செல்லப்பிராணிகளுடன் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

பங்கேற்பாளர்கள் செல்லப்பிராணிகளின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

கண்காட்சியின் இறுதி நாளான இன்று, போட்டியில் பங்கேற்ற நாய்களில் ஒன்றுக்கு ‘ஆண்டின் சிறந்த நாய்’ விருது வழங்கப்படும்.

Hindusthan Samachar / vidya.b