சோமநாதர் கோயில் மறுசீரமைப்பின் 75-வது ஆண்டு விழா - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து
புதுடெல்லி, 11 மே (ஹி.ச.) சோமநாதர் கோயில் மறுசீரமைக்கப்பட்டதன் 75-வது ஆண்டு விழாவையொட்டி இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் சமூக வலைத்தள கணக்கில் வெளியிட்ட பதிவில் அ
75th Anniversary of the Restoration of the Somnath Temple


புதுடெல்லி, 11 மே (ஹி.ச.)

சோமநாதர் கோயில் மறுசீரமைக்கப்பட்டதன் 75-வது ஆண்டு விழாவையொட்டி இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் சமூக வலைத்தள கணக்கில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியிருப்பதாவது,

ஸ்ரீ சோமநாதர் கோயில் மறுசீரமைக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. சோமநாதர் கோயில் இந்தியாவின் ஆன்மிக உணர்வு மற்றும் நம்பிக்கையின் வலிமையான அடையாளமாகும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், நம் நாடு இன்று சோமநாத் சுவாபிமான் உத்சவை கொண்டாடுகிறது.

இது இந்தியாவின் நிலையான சக்தியின் கொண்டாட்டமாகும். இந்தியாவின் ஆன்மிக மற்றும் கலாச்சார உணர்வை மேலும் விழிப்படையச் செய்து வளப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் தருணம் இது. எதிர்கால தலைமுறையினரும் இதிலிருந்து உத்வேகம் பெற வேண்டும்

என்று குறிப்பிட்டுள்ளார்.

பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றும், இந்தியாவின் நிலையான நம்பிக்கை மற்றும் நாகரிக பாரம்பரியத்தின் பிரதிநிதியுமான சோமநாதர் கோயிலில் நடைபெறும் சோமநாத் அம்ருத் மஹோத்சவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

இந்த கொண்டாட்டம் கோயில் மறுசீரமைக்கப்பட்டதன் 75 ஆண்டுகளை குறிக்கிறது.

விழாவின் ஒரு பகுதியாக, பிரதமர் பல்வேறு சமய மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்.

விசேஷ மகா பூஜையைத் தொடர்ந்து, கோயிலின் புனிதப்படுத்துதல் மற்றும் கொடியேற்றத்தை குறிக்கும் கும்பாபிஷேகம் மற்றும் துவஜாரோகண நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கிறார்.

மேலும், சோமநாதரின் வளமான பாரம்பரியம் மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் நினைவு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தையும் அவர் வெளியிடுகிறார்.

Hindusthan Samachar / vidya.b