அதிமுகவில் பிளவு? - எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மனு கொடுத்த 17 அதிமுக எம்எல்ஏக்கள்
சென்னை, 11 மே (ஹி.ச.) தமிழக அரசியலில் அதிமுகவில் புதிய திருப்பமாக, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை செயலாளர் மற்றும் தற்காலிக சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், சட்டப்பேரவையில் அதிமு
அதிமுக


சென்னை, 11 மே (ஹி.ச.)

தமிழக அரசியலில் அதிமுகவில் புதிய திருப்பமாக, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை செயலாளர் மற்றும் தற்காலிக சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில், சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மொத்தம் 47 தொகுதிகளில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்திருந்தது.

இந்நிலையில், கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 47 எம்எல்ஏக்களில் 17 பேர் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மீதமுள்ள எம்எல்ஏக்கள் முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி தலைமையில் தனி அணியாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் அதிமுகவில் உள்கட்சிப் பிளவு வெளிப்படையாக உருவாகியுள்ளதாக பேசப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P