தமிழக சட்டமன்ற சபாநாயகர் தேர்தலில் த.வெ.க சார்பில் ஜே.சி.டி. பிரபாகர் வேட்புமனு தாக்கல்
சென்னை, 11 மே (ஹி.ச.) தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கூடி இருக்கிறது. இதில் முதலாவதாக தமிழக முதல்வராக பொறுப்பேற்று கொண்டுள்ள விஜய், சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி ஏற்று கொண்டார். முதலமைச்சர் விஜயை தொடர்ந்து அமைச்சர்கள் எம்.
Assembly Speaker election.


சென்னை, 11 மே (ஹி.ச.)

தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கூடி இருக்கிறது.

இதில் முதலாவதாக தமிழக முதல்வராக பொறுப்பேற்று கொண்டுள்ள விஜய், சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி ஏற்று கொண்டார். முதலமைச்சர் விஜயை தொடர்ந்து அமைச்சர்கள் எம்.எல்.ஏ-க்களாக உறுதிமொழி ஏற்றனர்.

இதனை தொடர்ந்து எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்று கொண்டுள்ள உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார். இவரை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

இதனிடையே தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை காலை சட்டமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

மேலும் அவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சக்கரபாணியை நிறுத்த திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாளை காலை 10 மணிக்கு சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறும் என்றும், பேரவையில் உள்ள உறுப்பினர்களின் பலத்தை பொறுத்து சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார் என்றும் சட்டமன்ற செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

சட்டமன்றத்தின் நடவடிக்கைகளை நடுநிலையுடன் நடத்தும் முக்கிய பொறுப்பு சபாநாயகர் பதவி என்பதால், நாளைய தேர்தல் முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, கட்சிகள் தங்கள் உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் முடிவுகள் நாளை மதியத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b