எண்ணூர் சுனாமி குடியிருப்பில் ஒரு வயது குழந்தை வாளி தண்ணீரில் தலை குப்புற  தவறி விழுந்து உயிரிழப்பு
சென்னை, 11 மே (ஹி.ச.) சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசிப்பவர் முனீர் பாஷா இவரது மனைவி ரேஷ்மா பானு இவர்களுக்கு முகமது அர்ஷத் மற்றும் ஒரு வயது குழந்தை முகமது பகத் ஆகிய இரண்டு குழந்தைகளுடன் தாய் ரேஷ்மா பானுவின் தங்கை ஷபானா பானு ஆகிய ம
பலி


சென்னை, 11 மே (ஹி.ச.)

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசிப்பவர் முனீர் பாஷா இவரது மனைவி

ரேஷ்மா பானு இவர்களுக்கு முகமது அர்ஷத் மற்றும் ஒரு வயது குழந்தை முகமது பகத்

ஆகிய இரண்டு குழந்தைகளுடன் தாய் ரேஷ்மா பானுவின் தங்கை ஷபானா பானு ஆகிய

மூவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முனீர் பாஷா தனது பெரிய மகன் முகமது அர்ஷத்துடன் வேலைக்கு

சென்று விட்டார்.

அப்போது வீட்டிலிருந்த தங்கையிடம் ஒரு வயது குழந்தையான முகமது பகத்தை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு ரேஷ்மா பானு கணவருக்கு சாப்பாடு கொடுக்க

சென்று விட்டார்.

அவரது தங்கை குழந்தையை தனியாக விட்டுவிட்டு கழிவறைக்கு

சென்று விட்டு திரும்பி வந்த போது ஒரு வயது குழந்தை பக்கத்தில் இருந்த

குளியலறையில் தண்ணீர் நிரப்பி இருந்த வாளிக்குள் தலை குப்புற விழுந்து

அசைவின்றி கிடந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து குழந்தையை தூக்கி கொண்டு

திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக கூறினார்

சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தை இறப்புக்கான

காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam