அரசியல் களத்தில் தன்னை காட்டமாக விமர்சித்து வந்த சீமானை சந்தித்த முதலமைச்சர் ஜோசப் விஜய்
சென்னை, 11 மே (ஹி.ச.) அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனி பெரும் கட்சியாக உருவெடுத்து விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதவி ஏற்றார். ம
சீமான்


சென்னை, 11 மே (ஹி.ச.)

அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனி பெரும் கட்சியாக உருவெடுத்து விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதவி ஏற்றார்.

முதலமைச்சராக பதவியேற்ற அவர் முதல் நாள் தலைமைச் செயலகத்தில் கையெழுத்துட்டு பணிகளை தொடங்கினார். இரண்டாம் நாள் அன்று சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்ற அவர் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின், இல்லத்திற்கு நேரில் சென்று அவரிடம் வாழ்த்து பெற்றார்.

தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இல்லங்களுக்கும் சென்று விஜய் நட்பு பாராட்டினார்.

இந்நிலையில் அரசியல் களத்தில் தன்னை கடுமையாக விமர்சித்து வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இல்லத்திற்கும் விஜய் சென்றது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

இரு தலைவர்களும் ஆற தழுவி நட்பு பாராட்டி மகிழ்ந்தனர். முதலமைச்சர் விஜயின் செயல் நாகரிக அரசியலை வெளிப்படுத்துவதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P