Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 மே (ஹி.ச.)
தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக வாழ்த்து பெற்றார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலினின் இல்லத்திற்கு இன்று பிற்பகல் சென்ற முதலமைச்சர் விஜய், அவருடன் அரசியல் மற்றும் மாநில வளர்ச்சி தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நேற்று முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிலையில், அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெறும் நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. சந்திப்பின் போது இரு தரப்பினரும் பரஸ்பர மரியாதையுடன் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசியல் சூழலில் இந்த தொடர் சந்திப்புகள் கவனம் பெற்றுள்ளன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P