Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 11 மே (ஹி.ச)
நீதித்துறையில் தரவு ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், நீதிமன்றச் சேவைகளை எளிமைப்படுத்தும் வகையில் 'ஒரே வழக்கு ஒரே தரவு' மற்றும் 'சு சஹாய்' என்ற செயற்கை நுண்ணறிவு சாட்போட் ஆகிய இரு திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய இரண்டு முக்கிய டிஜிட்டல் திட்டங்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் தாலுகா நீதிமன்றங்களின் தகவல்கள் ஒரே ஒருங்கிணைந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும்.
இதன் மூலம் ஒரு வழக்கின் விவரங்களை அனைத்து நிலைகளிலும் தடையின்றிப் பெற முடியும். இது நீதிமன்றங்களுக்கு இடையிலான தரவுப் பரிமாற்றத்தை எளிதாக்கி, காலதாமதத்தைக் குறைக்க உதவும்.
தேசிய தகவலியல் மையம் மற்றும் உச்ச நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம் இணைந்து இதனை உருவாக்கியுள்ள 'சு சஹாய்' என்ற ஏஐ சாட்போட் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற சேவைகளை எளிதாக அணுக உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி மூலம் குடிமக்கள் தங்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை எளிய இடைமுகத்தின் மூலம் பெற முடியும்.
இந்த திட்டங்களை தொடங்கி வைத்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், டிஜிட்டல் முன்னெடுப்புகளைச் சிறப்பாகச் செயல்படுத்திய பதிவாளர் அலுவலக அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மேலும் இந்தத் திட்டங்கள் நீதித்துறை சார்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் பெரும் பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b