சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!
தமிழ்நாடு, 11 மே (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து வருகிறார். நாளை சபாந
விஜய்


தமிழ்நாடு, 11 மே (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

நாளை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என பேரவை செயலகம் அறிவித்துள்ள நிலையில், இன்று உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், முதல்முறையாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வருகை தந்தார்.

நேற்று முதல்வராக பதவியேற்றபோது கோட் சூட்டில் வந்திருந்த விஜய், இன்றும் அதே உடையில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

இதன் மூலம் தமிழக சட்டசபை வரலாற்றில் கோட் சூட்டில் சட்டப்பேரவைக்கு வந்த முதலாவது முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக முதல்வர் விஜய் பதவியேற்றார்.

அதனைத் தொடர்ந்து என். ஆனந்த், தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பதவியேற்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam