Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 11 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டிற்கென்று தனித்துவமான பண்பாடும் கலாச்சாரமும் இருப்பதாகவும், அந்த தமிழ் மரபை உயர்த்திப் பிடித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு இதயப்பூர்வமான பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
அரசியல் நிலைப்பாடுகள் வேறுபட்டிருந்தாலும் தமிழ்நாட்டின் அரசியல் மரபில் பரஸ்பர மரியாதையும் நாகரிகமும் முக்கியமானவை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை ஏழு ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், அதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த காலத்திலிருந்தும் நன்கு அறிவேன் என்றும், மிகச் சிறந்த மனிதர், ஜனநாயகத் தன்மை கொண்டவர்.
அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியான அன்போடு பழகக்கூடியவர் என்றும் பாராட்டியுள்ளார்.
முதல்வர் விஜய் மற்றும் மு.க.ஸ்டாலின் இடையிலான சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த ஜோதிமணி, இந்தச் சந்திப்பிற்கு முழுக்கத் தகுதியானவர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இது ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும் என்று கூறியுள்ளார்.
அரசியலில் கட்சி வேறுபாடுகளைத் தாண்டி பரஸ்பர அன்பும் மரியாதையும் அவசியம் என்றும், அதுவே நல்ல சமூகத்தை உருவாக்கும் என்றும் ஜோதிமணி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ