கே.வி.குப்பம் வட்டாட்சியர் பலராமன் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழப்பு
வேலூர், 11 மே (ஹி.ச.) வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பலராமன் (40). வேலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த இவர், தேர்தலின்போது கே.வி.குப்பம் வட்டாட்சியராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். த
KV kuppam


வேலூர், 11 மே (ஹி.ச.)

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பலராமன் (40). வேலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த இவர், தேர்தலின்போது கே.வி.குப்பம் வட்டாட்சியராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.

தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய நிலையில், நேற்று (மே 10) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், பலராமன் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு பலராமன் தனது அறையில், மயங்கிய நிலையில் கிடந்ததை அவரது குடும்பத்தினர் பார்த்துள்ளனர்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றுள்ளனர். அங்கு பலராமனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தாலுகா போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, உயிரிழந்த பலராமனின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த குடியாத்தம் தாலுகா போலீசார், அவரது மரணத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த பலராமனுக்கு சுகன்யா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN