கேரளாவில் ஆற்றில் மூழ்கி 3 பல் மருத்துவ மாணவர்கள் பலி
கேரளா, 11 மே (ஹி.ச.) கேரள மாநிலம் எர்ணாகுளம் எர்ணாகுளம் மாவட்டத்திற்குட்பட்ட கோதமங்கலம் பகுதியில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் 9 மாணவர்கள், அப்பகுதியில் அமைந்துள்ள பாலவன்பாடி ஆற்றிற்கு குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது அனைவரும் ஆற
நீரில்


கேரளா, 11 மே (ஹி.ச.)

கேரள மாநிலம் எர்ணாகுளம்

எர்ணாகுளம் மாவட்டத்திற்குட்பட்ட கோதமங்கலம் பகுதியில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் 9 மாணவர்கள், அப்பகுதியில் அமைந்துள்ள பாலவன்பாடி ஆற்றிற்கு குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது அனைவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த நிலையில், திருவனந்தபுரத்தை சேர்ந்த ஹரிஷ், கோட்டயத்தை சேர்ந்த அதுல் மற்றும் திருவல்லா பகுதியை சேர்ந்த பயோ ஆகிய 3 பேர் திடீரென நீரில் மூழ்கினர்.

இதனை கண்ட சக மாணவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், அப்பகுதி மக்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து நீண்ட நேர தேடுதல் மற்றும் மீட்பு பணிக்குப் பிறகு, மூன்று பேரும் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மாணவர்கள் குளித்த அந்த ஆற்றுப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதால் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் எச்சரிக்கையை மீறி மாணவர்கள் ஆற்றில் இறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் எர்ணாகுளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / VINOTH KUMAR P