கிருஷ்ணகிரி அருகே இரண்டு இளைஞர்கள் வெவ்வேறு இடங்களில் எரித்துக் கொலை!
கிருஷ்ணகிரி, 11 மே (ஹி.ச.) கிருஷ்ணகிரி அடுத்த ராயக்கோட்டை செல்லும் சாலையில் வேப்பாலம்பட்டி மற்றும் கொடுகூர் என்ற பகுதியில் சாலை ஓரமாக இரண்டு ஆண் சடலங்கள் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந
Death


கிருஷ்ணகிரி, 11 மே (ஹி.ச.)

கிருஷ்ணகிரி அடுத்த ராயக்கோட்டை செல்லும் சாலையில் வேப்பாலம்பட்டி மற்றும் கொடுகூர் என்ற பகுதியில் சாலை ஓரமாக இரண்டு ஆண் சடலங்கள் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது.

அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி தாலுகா, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, குருபரப்பள்ளி, வேப்பனஹள்ளி, மகாராஜா கடை ஆகிய ஆய்வாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எரிக்கப்பட்டு கருகிய நிலையில் இருந்த சடலங்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர்கள் யார் என கண்டுபிடிப்பதில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சடலம் கிடந்த இடத்தில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தற்போது மோப்ப நாய் உதவியுடன் தீவிரமாக தேர்தல் வேட்டையும் நடைபெற்று வருகிறது.

மேலும் இறந்த இளைஞர்கள் குறித்து விசாரிக்க 8 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி அருகே இரண்டு இளைஞர்கள் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN