சுற்றுலா முடித்து வீடு திரும்பிய குடும்பம் - கிருஷ்ணகிரி அருகே லாரி மோதி அண்ணன்-தங்கை பலி
கிருஷ்ணகிரி, 11 மே (ஹி.ச.) கிருஷ்ணகிரி அருகே சுற்றுலா சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த குடும்பத்தினரின் கார் மீது லாரி மோதி ஏற்பட்ட கோர விபத்தில், கேரளாவை சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்த
சாலை விபத்து


கிருஷ்ணகிரி, 11 மே (ஹி.ச.)

கிருஷ்ணகிரி அருகே சுற்றுலா சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த குடும்பத்தினரின் கார் மீது லாரி மோதி ஏற்பட்ட கோர விபத்தில், கேரளாவை சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர், சுற்றுலா பயணத்தை முடித்து காரில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிரே வந்த லாரி திடீரென கார் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் வணிக கப்பற்படை வீரராக பணியாற்றி வந்த திபக் (40), அவரது சகோதரர் திவ்யா (30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மேலும் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலத்த காயமடைந்தனர்.

விபத்தை பார்த்த பொதுமக்கள் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குருபரப்பள்ளி போலீசார், உயிரிழந்த இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam