மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே முதல் கடமை - எம்.எல்,ஏ உதயநிதி ஸ்டாலின்
சென்னை, 11 மே (ஹி.ச.) தமிழ்நாடு சட்டப்பேரவையில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியின் புதிய சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். சபாநாயகர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உறுதிமொழி எடுத்துக்கொண்டு
MLA Udhayanidhi Stalin


சென்னை, 11 மே (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டப்பேரவையில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியின் புதிய சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்.

சபாநாயகர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உறுதிமொழி எடுத்துக்கொண்டு எம்எல்ஏவாக தனது பணியை தொடங்கினார்.

உதயநிதி ஸ்டாலினுடன், திமுகவைச் சேர்ந்த முக்கிய சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருசேர பதவியேற்றனர்.

அவர்களில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், வி. செந்தில் பாலாஜி, கே.ஆர். பெரியகருப்பன் என்கிற சக்கரபாணி, சி.வி. மெய்யநாதன், எஸ்.எஸ். சிவசங்கர், மற்றும் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்குவர்.

பதவியேற்பு நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின்,

மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே எனது முதல் கடமை.

திருவல்லிக்கேணி தொகுதியின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன்

என்று உறுதியளித்தார்.

அதே போல் முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் எம்எல்ஏவாக கடவுள் அறிய எனக் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

தொடர்ந்து போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எம்எல்ஏவாக பதவியேற்றார்.

Hindusthan Samachar / vidya.b