முதலமைச்சர் விஜய்க்கு அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன் - மு.க.ஸ்டாலின்
சென்னை, 11 மே (ஹி.ச.) தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பு குறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
Vijay


சென்னை, 11 மே (ஹி.ச.)

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த சந்திப்பு குறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியலில் முக்கிய மாற்றங்களுக்கிடையே நடைபெற்ற இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆளும் தரப்பும் எதிர்க்கட்சியும் இடையே அரசியல் நாகரிகம் வெளிப்பட்ட நிகழ்வாகவும் இது பார்க்கப்படுகிறது.

மேலும், தமிழகத்தின் வளர்ச்சி, மக்கள் நலன் மற்றும் நிர்வாக அனுபவம் தொடர்பாக இருவரும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பு தமிழக அரசியலில் புதிய அணுகுமுறைக்கான அறிகுறியாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / P YUVARAJ