Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 11 மே (ஹி.ச.)
நேற்று செகந்திராபாத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வலியுறுத்தினார்.
மேலும் அவர் குடும்பங்கள் சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றும், அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கவும் சுற்றுச்சூழலைக் காக்கவும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் உள்ளிட்ட 7 வேண்டுகோள்களை நாட்டுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் பிரதமர் மோடி சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பது பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் தேசிய பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் என்று தெரிவித்தார்.
மேற்கு ஆசிய நெருக்கடியைக் கையாளும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த ‘ஏழு வேண்டுகோள்களை’ மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது,
நேற்று, மோடி ஜி பொதுமக்களைத் தியாகங்கள் செய்யுமாறு கேட்டுக்கொண்டார் . தங்கம் வாங்காதீர்கள், வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யாதீர்கள், பெட்ரோல் பயன்பாட்டைக் குறையுங்கள், உரங்கள் மற்றும் சமையல் எண்ணெயைக் குறைத்துக் கொள்ளுங்கள், மெட்ரோவில் பயணம் செய்யுங்கள், வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்.
இவை அறிவுரை வார்த்தைகள் அல்ல,இவை தோல்விக்கான சான்றுகள்.
கடந்த 12 ஆண்டுகளில், நாடு இத்தகைய ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இப்போது பொதுமக்களிடம் எதை வாங்க வேண்டும், எதை வாங்கக் கூடாது, எங்கு செல்ல வேண்டும், எங்கு செல்லக் கூடாது என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மீண்டும் மீண்டும், அவர்கள் தங்கள் சொந்தப் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிப்பதற்காகவே, பொறுப்பைப் பொதுமக்கள் மீது சுமத்துகிறார்கள்.
நாட்டை நடத்துவது இனி ஒரு சமரசம் செய்துகொண்ட பிரதமரின் திறனுக்குள் இல்லை.
இவ்வாறு அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b