Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 11 மே (ஹி.ச.)
தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை புனித ஜார்ஜ் கோட்டையில் தொடங்கியது.
இதில் நேற்று முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய்க்கு கேரளத்தின் முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தில் கூறப்பட்டிருப்பதாவது,
ஜனநாயக அமைப்பில் மக்கள் வழங்கும் தீர்ப்பு மிகப்பெரிய பொறுப்பாகும். தமிழக மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை, சமூக நீதி, மதச்சார்பின்மை, மக்கள் நலன் ஆகிய விழுமியங்களைக் காக்கும் ஓர் அரசாங்கமாக மாறும் என நம்புகிறேன்.
கேரளமும், தமிழ்நாடும் நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்கள். இரு மாநில மக்களும் கூட்டாட்சி முறையை வலுப்படுத்தவும், மதச்சார்பின்மையை பாதுகாக்கவும் உறுதிமொழி எடுத்துள்ளனர்.
ஒருமித்த கருத்துடன், இரு மாநில மக்களும் இணைந்து செயல்பட முடியும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b