Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 11 மே (ஹி.ச.)
பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்ட சில அறிவுறுத்தல்கள் மக்களிடையே பெரும் அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
வெளிநாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளாதீர்கள், தங்கம் வாங்காதீர்கள், வீட்டிலிருந்தே பணி செய்யுங்கள், பெட்ரோல் மற்றும் டீசலைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள் என்று பிரதமர் மோடி மக்களுக்கு உபதேசம் செய்துள்ளார்.
பிரதமரின் இந்த உரை, மக்கள் தலையில் பெரிய கல்லைத் தூக்கிப் போடப்போகிறாரோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை மிக அதிகமாக உயர்த்துவதற்கான முன்னோட்டமாகவே இந்தப் பேச்சு இருப்பதாக சந்தேகம் எழுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிரமப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ