லக்னோ ஹோட்டலில் திடீர் தீ விபத்து
லக்னோ, 11 மே (ஹி.ச) உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள பிரபல ரோவர்ஸ் உணவகத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வாகனங்கள், துரிதமாக செயல்பட்டு தீயை முழ
Sudden Fire Accident at a Lucknow Hotel


லக்னோ, 11 மே (ஹி.ச)

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள பிரபல ரோவர்ஸ் உணவகத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வாகனங்கள், துரிதமாக செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தன. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து ஹஸ்ரத்கஞ்ச் தீயணைப்பு பாதுகாப்பு அதிகாரி ராம்குமார் ராவத் கூறுகையில்,

ரோவர்ஸ் உணவகத்தின் தரைத்தளத்தில் உள்ள சமையலறையில் இருந்துதான் தீ முதலில் பரவியது.

உடனடியாக தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்றார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு நேரம் என்பதால் உணவகத்தில் வாடிக்கையாளர்கள் கூட்டம் இருந்ததாக கூறப்படுகிறது.

எனினும், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், சமையலறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

நகரின் முக்கிய வணிகப் பகுதியான ஹஸ்ரத்கஞ்சில் ஏற்பட்ட இந்த தீ விபத்து சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / vidya.b