சட்டப்பேரவை தேர்தலில் வென்ற உறுப்பினர்கள் - இன்று முறைப்படி பதவியேற்கின்றனர்
சென்னை, 11 மே (ஹி.ச.) 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிதாக தேர்வாகியுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள். மேலும், பேரவைத் தலைவர் மற்றும்
சட்டப்பேரவை


சென்னை, 11 மே (ஹி.ச.)

17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு கூடுகிறது.

இந்தக் கூட்டத்தில் புதிதாக தேர்வாகியுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள்.

மேலும், பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தலும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று தமிழ்நாடு பேரவைச் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பெரும்பான்மையைக் கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பும் நடத்தப்படும்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 107 இடங்களில் வென்ற தவெக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் அனுமதி அளித்தார்.

மேலும், வரும் 13-ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கவும் ஆளுநர் கெடு விதித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P