பிரதமரின் வேண்டுகோள்களை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் - தமிழ்நாடு ஆளுநர்
சென்னை, 11 மே (ஹி.ச.) உலகளாவிய சவாலான சூழ்நிலையில் நாட்டை வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வேண்டுகோள்களை பொதுமக்கள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார். இது
Gover


சென்னை, 11 மே (ஹி.ச.)

உலகளாவிய சவாலான சூழ்நிலையில் நாட்டை வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வேண்டுகோள்களை பொதுமக்கள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

வீட்டிலிருந்தபடியே பணிபுரிவதற்கு இயன்றவரை முன்னுரிமை அளித்தல், எரிபொருள் பயன்பாட்டை குறைத்தல், அத்தியாவசியமற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்த்தல், சுதேசி பொருட்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பொறுப்புணர்வான நடைமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைத்தல், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல் மற்றும் தேவையற்ற தங்கக் கொள்முதல்களை தவிர்த்தல் ஆகியவற்றின் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

கூட்டு பொறுப்புணர்வும் அர்ப்பணிப்பும் கொண்ட செயல்பாடுகள் மூலம் இந்தியாவின் நிலைத்தன்மை மேலும் வலுப்பெற்று, சுயசார்பு இந்தியாவை நோக்கிய முன்னேற்றம் விரைவுபெறும் என ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ